இரண்டாம் பாகம்
தீயம்றுப் படலம்
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
3677.
பானலங் கழனி சூழ்ந்த
நசுதெனும் பதியி னாளுங்
கோனிலை பொருந்தி வாழுங்
கத்துபான் கூட்டத் தாரைத்
தீனிலைப் படுத்த வேண்டுஞ்
செயலினைக் கருத்துட் கொண்டார்
மாநிலம் பாதந் தோயா
வள்ளன்மா முகம்ம தன்றே.
1
(இ-ள்) பெருமை பொருந்திய
இப்பூமியின் மீது பாதங்களானவை பொருந்தப் பெறாத வள்ளலாகிய மகத்துவத்தை யுடைய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் கருங்குவளைப் புஷ்பங்களையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த நசுதென்று சொல்லு
மூரிற் பிரதிதினமும் கோன்மையின் நிலைமையைப் பொருந்தி வாழுகின்ற கத்துபானென்ற கூட்டத்தார்களைத்
தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தின் நிலைபரத்தில் உட்படுத்த வேண்டிய செயலை மனதினுட்
கொண்டார்கள்.
3678.
மலர்தலை யுலகம் போற்று
மதீனமா நகரந் தன்னி
லிலகிய புகழ்சேர் வள்ள
லியலுது மானை வைத்துப்
பலகதிப் பரியி னோடும்
படைக்கலத் தரசர் சூழப்
புலவர்க ளினிது வாழ்த்த முகம்மது
புறப்பட் டாரால்.
2
(இ-ள்) அவ்வாறு கொண்ட
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
விரிந்த இடத்தையுடைய இந்த உலகமானது துதிக்கின்ற திரு மதீன மாநகரத்திற் பிரகாசியா நிற்குங்
கீர்த்தியைப் பொருந்திய வள்ளலான ஒழுங்கைக் கொண்ட உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு
அவர்களை அரசாக வைத்துப் பலவித நடைகளையுடைய குதிரைகளோடும் யுத்தாயுதங்களைத் தரித்த மன்னர்களாகிய
அசுஹாபிமார்கள் சூழவும், வித்துவான்கள் இனிமையோடு துதிக்கவும் புறப்பட்டார்கள்.
3679.
குறைவற நசுதில் வாழுங் கத்துபான்
கூட்டத் தாரை
மறைவழி யிசுலா மாக்கி மாதமொன்
றிருந்து பின்னர்
கறைநிணங் குருதி மாறாக் கதிர்வைவேல்
வீரர் சூழ
நறைமலர்த் துடவை போர்த்த
மதீனமா நகரில் வந்தார்.
3
(இ-ள்) அவ்வாறு புறப்பட்ட
அவர்கள் நசுதென்னும் நகரத்தில் வறுமையில்லாது வாழ்ந்த அந்தக் கத்துபான்
|