இரண்டாம் பாகம்
4055.
ஆமதி யிலனற மறுத்த புன்மையன்
கோமதத் துறைந்தனன் குணமென் றுன்னிய
நாமமுங் கெடுத்தன னரகந் தேடிய
சூமனு மகிழ்வுறச் சூழ்ச்சி சொல்லுவன்.
4
(இ-ள்) ஆகக் கூடிய அறிவான
தில்லாதவனும், புண்ணியத்தை வெறுத்த சிறுமையை யுடையவனும், மாட்டைப் போலும் மதத்திருந்தவனும்,
குணமென்று கருதிய பெயரையுஞ் சிதைத்தவனும், நரகலோகத்தைச் சம்பாதித்த சூமனாகிய இபுலீசு லஃகுனத்துல்லாவுஞ்
சந்தோஷ மடையும் வண்ணம் ஆலோசனைகள் சொல்லப் பட்டவனும்.
4056.
வடிவுடை யசுறபு மதலை யாயின
னிடருறும் பகைககு பென்னும் பேரினன்
கொடியனெ கூதியங் குலத்திற் றோன்றின
னுடலெனப் பவத்தினா லுருவங் கொண்டனன்.
5
(இ-ள்) அழகை யுடைய
அசுற பென்பவனது புதல்வனானவனும், துன்பத்தைப் பொருந்திய விரோதத்தைக் கொண்ட ககுபென்று
சொல்லும் பெயரை யுடையவனும், துட்டத் தனத்தையுடையவனும், எகூதிகளது கூட்டத்திற் பிறந்தவனும்,
பாவத்தினாற் சரீரமென்று சொல்லும் வடிவத்தைக் கொண்டவனும்.
4057.
இன்னதன் மையனலீ றென்னுங் கூட்டத்தோர்
மன்னன்வெங் குபிரினின் மனத்தை யோட்டினன்
பன்னுவ தென்கொலப் பாவி செய்கையை
யுன்னவும் பழுதிதென் றுரைத்து நின்றனர்.
6
(இ-ள்) இவ்விதத் தன்மையை
யுடையவனும், நலீறென்று சொல்லுங் கூட்டத்தார்களது அரசனும், வெவ்விய குபிர் மார்க்கத்தில்
தனதிதயத்தைச் செலுத்தினவனுமான அந்தப் பாதகனது செய்கையை யான் சொல்லுவதென்னை? ஒன்று
மில்லை, அதை நினைத்தாலுங் குற்றமென்று சொல்லி அங்கு நின்றார்.
4058.
வேயுரை கேட்டலும் வேந்தர் மெல்லவெந்
தீயெனச் சினத்தினை வளர்ப்பக் கண்ணினிற்
காயெரி யுமிழ்ந்தனர் நகையுங் காட்டினர்
வாயினைக் கறித்தனர் மன்ன ரியாவரும்.
7
(இ-ள்) அவ்வாறு
சொல்லிய அந்தத் தூதுவரது வார்த்தையை இராஜரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது
|