பக்கம் எண் :

சீறாப்புராணம்

1484


இரண்டாம் பாகம்
 

குடங்கையின் மறைத்தங் கேகுவன் தீனின்

     கோதையர் தமையழைத் திருத்திச்

சடந்தனி கருக விழிதரு வார்த்தை

     சாற்றுவன் சாற்றுத லொழியான்.

32

     (இ-ள்) அவ்வாறிருந்த அவன் தங்களுக்குக் கடமை யென்று கூறும் நோன்பை நோற்கின்ற முஸ்லிம்களைப் பார்த்த சமயங்களிலும் அவர்களைத் தொட்ட சமயங்களிலும் வேகத்திற் குளங்களிற் சென்று சென்று ஸ்நானஞ் செய்குவான். தகுதியானத் தொழுகையை யுடையவர்களைக் கண்டாலுங் கண்களை உள்ளங்கைகளினாற் பொத்தி அப்பாற் செல்லுவான். தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய பெண்களைக் கூப்பிட்டு இருக்கும்படி செய்து அவர்களது தேகமானது ஒப்பறத் தீயும் வண்ணம் இழிவைத் தருகின்ற பேச்சுகளைச் சொல்லுவான். அப்படிப் பேசுவதை விட்டும் ஒழிய மாட்டான்.

 

4084.  ஆரண மோதுந் திருமொழி கேட்கி

          னகறுகளைச் செவிபுதைத் தகல்வன்

     காரண நயினா ரியற்றுத லறிந்துங்

          கட்டுரை வாய்மையென் றுரைப்பன்

     றாரணி தனிலோர் தூதரு மின்று

          தனியவ னென்பது மின்று

     நீரணி நகரத் துறைகுப லல்லா

          னிகரினி வேறுமின் றென்பான்.

33

     (இ-ள்) அன்றியும், அவன் புறக்கானுல் அலீமென்று சொல்லும் வேதத்தை ஓதுகின்ற தெய்வீகந் தங்கிய வசனத்தைக் கேள்வியுற்றாற் பரந்த துவாரத்தை யுடைய காதுகளைப் பொத்திக் கொண்டு செல்லுவான். நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் காரணத்தினாலான அற்புதங்கள் செய்வதைத் தெரிந்தும் அஃதைப் பொய்மொழியினது வன்மையென்று சொல்லுவான். இந்தப் பூமியின்கண் ஒரு றசூலுமில்லை. ஏகனான ஒரு நாயனுள னென்று சொல்வதுமில்லை. சமுத்திரத்தைப் பொருந்திய இவ்வுலகத்தில் தங்கிய குபலென்று சொல்லுந் தம்பிரானே யல்லாமல் இனி அவருக் கொப்பு வேறொன்று மில்லையென்று சொல்லுவான்.

 

4085.  இன்னன பேசி தீனருக் கிடுக்கண்

          செய்தவ ணிருந்தன னிதனை

     மன்னர்மன் னபிகேட் டகங்கறுத் தவன்றன்

          வாய்மையி னிணங்கில னினிமே