இரண்டாம் பாகம்
4151.
மறைமு ழக்குடன் பதுறினி
லிறைய வனபி யெய்தலும்
கறுபு சேயுரங் கண்டிலா
னறிவு போய்மன மஞ்சினான்.
12
(இ-ள்) புறுக்கானுல்
அலீமென்னும் வேதவசனத்தின் தொனியோடும் யாவற்றிற்குங் கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்
நபியாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் ஹபீபு முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் அவ்வாறு அந்தப் பதுறென்னுந் தானத்திற் போய்ச் சேர்ந்த மாத்திரத்தில், ஹறுபென்பவனது
புத்திரனான அந்த அபாசுபியானென்பவன் அவர்களது சாமர்த்தியத்தைப் பாராதவனாக உணர்வொழிந்து
உள்ள மானது பயங்கரமடையப் பெற்றான்.
4152.
தீட்டு வேல்குடை திண்பரி
யீட்டு பண்டமற் றென்பவும்
போட்டு விட்டவன் பூமிபார்த்
தோட்ட மாய்விழுந் தோடினான்.
13
(இ-ள்) அவ்வா
றடையப் பெற்ற அந்த அபாசுபியா னென்பவன் கூராக்கிய வேலாயுதங்களையும் கவிகைகளையும் வலிமையுற்ற
குதிரைகளையுஞ் சம்பாதித்த பொருள்களாகிய மற்ற அனைத்தையும் அவ்விடத்திற் போட்டுவிட்டுத்
தரையைப் பார்த்து ஓட்டமாக விழுந்து ஓடினான்.
4153.
ஆசை யுற்றுமு னாயினார்
பூசல் முற்றமுன் போயினார்
மோச னப்பத முற்றினார்
பாச றைப்புறம் பற்றினார்.
14
(இ-ள்) அவன் அவ்வாறு
ஓட, ஆசையைப் பொருந்தி முன்னேறிச் சென்றவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா
செய்யிது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் யுத்தமானது செய்து முடிவு பெறுவதற்கு
முன்னர்ச் சென்றவர்களான அந்தக் காபிர்களது விடுகையான இடத்தை முற்றிக்கையிட்டு அங்குள்ள
பாடி வீடுகளின் தானத்தைக் கைப்பற்றினார்கள்.
4154.
பற்று பல்பல பண்டமு
மற்ற வெம்படை வாசியுங்
கொற்ற வீரர்முன் கொண்டுவந்
துற்ற பல்சரக் குள்ளதும்.
15
|