முதற்பாகம்
பொழிப்புரை
விடச்
சமுத்திரத்தைப் போலும் பெரிய கடுமையாகிய கியாம நாளையினது கேள்விகள் அடாத காரணீகத்தை
உடையவர்களும், பூமியினிடத்து யாவற்றிற்கும் முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்
தூதர்களும், மேவப் பெற்ற வாழ்வையுடையவர்களுமான உலுல் அஜூமிகளாகிய நான்குடன் ஆறான பத்துப்
பேர்களும் பொருந்தும் வண்ணம் ஆட்கொள்ளும்படி அவர்களின் திருவடிகளைப் பிரதி தினமும் யாம்
நாக்கினாற் துதிப்பாம்.
வேறு
15.
ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை
யாலு
மோங்குபுக ழாகினோர்
தூத
ராங்கடவு ணாவி லாய்ந்தமறை
தூவிநான்கு மத்க பாகினோர்
நீ்த
வான்களுறு போத வான்கள்குரு
நேர்மை யாந்தகைமை யாகினோர்
வேத
வான்களெனு நாலிமாம்கள்பத
மேலு
மியாம்புகல வேணுமே.
15
பதவுரை
ஆதம் ஈன்ற
மனு - நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்கள் பெற்ற மானுஷீகர்களின், நீதி ஆண்ட முறையாலும் -
நியாயத்தை ஆட்சி செய்த முறைமையினாலும், ஓங்கு புகழ் ஆகினோர் - அதிகரியாநிற்கும்
கீர்த்தி யானவர்களும், தூதர் ஆம் கடவுள் - றசூலாகிய குரு நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின், நாவில் ஆய்ந்த மறை - நாக்கினாற் றெரிந்த
வேதத்தை, தூவி நான்கு மத்ஹபு ஆகினோர் - பெய்து நான்கு மதுஹபாக்கினவர்களும், நீத வான்கள் -
நீதத்தை உடையவர்களும், உறுபோதவான்கள் - பொருந்திய அறிவை உடையவர்களும், குரு நேர்மை ஆம்
- குருவினது ஒழுங்கான, தகைமை ஆகினோர் - தகைமையானவர்களு மாகிய, வேதவான்கள் எனும் -
வேதவான்களென்று கூறும், நாலிமாம்கள் பதம் - நான்கி மாம்களின் திருவடிகளை, மேலும் யாம் புகல
வேணுமே - மேலும் நாம் துதிக்க வேண்டும்.
பொழிப்புரை
நபி ஆதமலைகிஸ்ஸா மவர்கள் பெற்ற
மானுஷீகர்களின் நியாயத்தை ஆட்சி செய்த முறைமையினாலும் அதிகரியா நிற்கும்
கீர்த்தியானவர்களும், றசூலாகிய குரு நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்லமவர்களின்
|