முதற்பாகம்
நதிகடந்த படலம்
கலிவிருத்தம்
723.
கட்செவி
பகையறுத் தரிய கானகத்
துட்படு
மிடர்தவிர்த் தொளிரும் வள்ளலை
வட்படும்
வேலுடை மாக்க ளியாவரு
நட்பொடு
கலந்துட னடந்து போந்தனர்.
1
(இ-ள்)
சர்ப்பத்தினது விரோதத்தை அறும்படி செய்து அரிதான அக்காட்டினகமுண்டாகும் துன்பங்களை
யொழித்துப் பிரகாசியாநிற்கும் வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வஸல்லமவர்களைக்
கூர்மை பொருந்திய வேற்படை தாங்கிய கைகளையுடைய அவ்வியாபாரிகளனைவரும் சினேகத்துடன் கலந்து
கூடவே நடந்து போயினார்கள்.
724. குறுபொறை
கடந்துபோய்க் குவடு சுற்றிய
சிறுநதி
யாறுகள் கடந்து சென்றபின்
மறுவுறு மதிதொடு மலையு மம்மலைப்
பெறுமுறை
யருவியும் பிறங்கத் தோன்றின.
2
(இ-ள்)
அவ்வாறுபோன அவர்கள் யாவரும் சிறிய குன்றுகளைத் தாண்டிச் சென்று மலைகளை வளைந்திராநின்ற
சின்னச் சின்ன நதிகளையும் ஆறுகளையும் கடந்துபோனதின் பின்னர்க் களங்கத்தைப் பொருந்திய
ஆகாயத்தின்கண் ணிருக்கின்ற சந்திரனைத் தீண்டாநிற்கும் ஒரு மலையும் அம்மலையைப் பொருந்திய
ஒழுங்கினையுடைய ஒரு நதியும் பிரகாசிக்கும்படி தெரிந்தன.
725. அம்மலை
நதிக்கரை யடுத்துச் சீரிய
செம்மலுஞ்
சூழ்ந்ததே சிகரு நீங்கிலாச்
சும்மைகொண்
டிறங்கிநீ ராடித் தூநறைப்
பொம்மலுண்
டரும்பகற் பொழுது போக்கினார்.
3
(இ-ள்)
அப்போது அந்தப் பருவத்தினது ஆற்றங்கரையை சிறப்பையுடைய செம்மலான நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களும் அவர்களை வளைந்த
|