பக்கம் எண் :

சீறாப்புராணம்

33


முதற்பாகம்
 

          சிற்றிடை யொசிய மதிமுகம் பெயர்ப்பச்

               சேற்றிடை நாற்றினை நடுவோர்

          பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம்

               பசியநெற் பயிரொளி பாய

          மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு

               மரகதக் கடகமொத் திருந்த.

32

      (இ-ள்) அன்றியும், முற்றிய ஆபரணங்கள் கிடக்கப் பெற்ற முலையாகிய மலைகள் அசையவும், மேகங்கள் தவழாநிற்கும் கரியகூந்தலானது நெகிழவும், சிறிய மருங்குலானது ஆடவும் சந்திரனைப் போன்ற முகமானது வெயர்க்கவும், சேற்றின்கண் அந்நாற்றை நடுவோர்களாகிய அவ்வுழத்தியர்களின் மெல்லிய கைகளிற் பொருந்திய இரும்பு வளைகளானவை பசுமை தங்கிய நெற் பயிரினது பிரகாசமானது பாய வேறே யாதை யுவமை கூறுவது? விரிந்த கிரணங்களைப் பரவச் செய்யும் மரகதத்தினாலான வளையை நிகர்த்திருந்தன.

 

     53. வெறிமது வருந்தி மரகதக் கோவை

             மென்பிடர் கிடந்துருண் டசையக்

        கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக்

             கடைசியர் களிப்பொடு தவளச்

        சிறுநகைத் தரளப் பவளமெல் லிதழிற்

             செழுமலர்க் கைவிரற் குவித்துக்

        குறிதரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க்

             குடவளைக் குரவையோ டிகலும்.

33

      (இ-ள்) அன்றியும், அவ்வுழத்தியர்கள் சந்தோஷத்தோடு முன் மதத்தைக் கொண்ட கள்ளைக்குடித்து மரகத மாலையானது மெல்லிய பிடரினிடத்து கிடந்து உருண்டு அசையும் வண்ணம் கோபித்த மனத்துடன் தமது கூட்டத்தோடும் பகைத்து வெண்ணிறத்தை யுடைய சிறிய பற்களாகிய முத்துக்களைக் கொண்ட மெல்லிய அதரத்தில் செழிய தாமரை மலர்போலும் கைகளின் விரற்களைக் குவியச் செய்து குறிக்கும் குரவையினது ஓசையானது, கூனைக் கொண்ட பிடரையும் பிளந்த வாயையுமுடைய குடத்தையொத்த சங்குகளின் குரவையினது ஓசையோடு பகையா நிற்கும்.

 

     54. கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங்

             குடமுலைக் கடைசியர் செழுங்கைக்

        காந்தண்மெல் விரற்குங் கடுவரி விழிக்குங்

             கடைந்திணைக் கியகணைக் காற்குஞ்