|
முதற்பாகம்
சமுத்திரத்தின்கண்
நீந்தி நீந்திக் கரையை அடைவதற்கு அரிதாய்த் தளர்ந்து இருகண்களும் நித்திரையைப் பொருந்தாது
வாட்டமுற்று வருத்தமானது பரவி புத்தியென்னும் பயிரைப் போர்ப்ப இன்ப மடையாது சிலநாள் கழிந்த
பின்னர்.
1053.
மண்ணினுக் கரசாய்
வந்த முகம்மதின் வடிவு கூர்ந்த
கண்ணினுங் கருத்து
மாறா தடிக்கடி தோற்ற நாணிப்
பண்ணெனச் சிவந்த
வாயார் பஞ்சணை பாயல் புக்கி
யெண்ணிலா தெண்ண
முற்றாங் கிருந்தவர் துயிலுங் காலை.
20
(இ-ள்) இசைப்பாட்டினைப் போன்ற வார்த்தைகளை
யுடைய சிவந்த வாயினைக் கொண்ட அக்கதீஜா நாயகமவர்கள் இப்பூலோக முழுவதுக்கும் அரசாக வந்த நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வடிவமானது அதிகரித்துத் தங்களது கண்களிலும்
கருத்திலும் நீங்காது உருவெளித் தோற்றமாய் அடிக்கடி தெரிய, அதைக் கண்டு வெட்கமுற்றுப் பஞ்சணையினையுடைய
பாயலின்கண் போய்ச் சேர்ந்து எண்ணாத எண்ணங்களையெல்லாம் எண்ணி அவ்விடத்திலே தானே தங்கியிருந்து
நித்திரை செய்கின்ற சமயத்தில்.
1054.
வயிரவே ரூன்றிச்
சேந்த மாணிக்கப் பணர்விட் டோடி
யியன்மர கதத்தின்
சோதி யிளந்தளிர் குழைப்ப வீன்று
நயனுறு நகரை மூடி
நற்கனி யுகுத்து வாசச்
செயமல ரிடைவி டாது
சிரமிசைச் சொரிய மாதோ.
21
(இ-ள்) வயிரமாகிய வேர்களை யூன்றிச் செந்நிறத்தையுடைய
மாணிக்கமாகிய கிளைகளை நானாபக்கங்களிலும் விட்டு ஓடி மரகதத்தின் பிரகாசமாகிய இளம்
பருவத்தையுடைய இலைகளைக் குழையும்படி ஒழுங்காகப் பெற்று நன்மை பொருந்திய அந்தத் திருமக்கமா
நகரத்தைப் போர்த்து நல்ல பழவர்க்கங்களைச் சொரிந்து வாசனையையுடைய சிவந்த புஷ்பங்களை
இடைவிடாமல் தங்களது தலையின் மீது சிந்தும் வண்ணம்.
1055.
வானமட் டோங்கி
நீண்ட மாணிக்கத் தருவின் பொற்பூ
நானில முழுதும் விண்ணு
நறைகமழ்ந் திடுவ நோக்கித்
தேனமர் குழலி
னாருஞ் செல்வரும் பெரிது போற்றப்
பானலங் கடந்த
கண்ணார் பயனுறுங் கனவு கண்டார்.
22
(இ-ள்) ஆகாயலோகம் வரையும் வளர்ந்து
நீட்சியுற்ற ஒரு மாணிக்கமரத்தின் அழகிய புஷ்பங்கள் குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை, யென்ற
நான்கு வகைப்பட்ட இந்தப் பூலோக
|