|
முதற்பாகம்
விலங்கலென வளர்மாட
நகர்வீதி
தனைக்கடந்து
விரைவி னேகிக்
குலங்கெழும மனைபுகுந்து
மனைவியர்க்கு
மணமொழியைக்
கூறி னாரால்.
63
(இ-ள்) அவ்வாறு சொல்லி அபீத்தாலி
பவர்கள் மாறாத இரத்தின மாலையணிந்த தோள்களையுடைய தங்களின் சகோதரர்களோடும் அங்கு வந்திருந்த
மற்றும் எல்லாவர்களோடும் பிரகாசியா நின்ற இலைகளைக் கொண்ட வேலாயுதத்தையுடைய குவைலிதி னிடத்திலிருந்து
உபசாரத்தினுட னெழும்பி அன்பானது அதிகரிக்கும் வண்ணம் மலைகளைப் போலும் ஓங்கா நிற்கும் மாடங்களையுடைய
அந்தத் திருமக்கமா நகரத்தின் தெருக்களைத் தாண்டிச் சீக்கிரமாய் நடந்து சென்று இனத்தவர்கள்
நிறையும்படி வீட்டின்கண் நுழைந்து தங்கள் மனையாளான பாத்திமா அவர்களுக்கு விவாகத்தினது வர்த்தமானங்களைச்
சொன்னார்கள்.
|