முதற்பாகம்
1658.
கலைமறைதேர்
முகம்மதுட னுரையாம
லெழுந்துதலை
கவிழ்ந்து நாணி
நிலமையட
லறிவகன்ற நெஞ்சினொடும்
புலம்பிநெடு
மூச்சிற் சோர்ந்து
சிலைவயவர்க்
கெதிருரைப்ப தென்னெனச்சஞ்
சலத்தினடுத் தியங்கி வாடிக்
குலைகுலைந்து
குலத்தவரு மபூசகுலு
மிருந்தபெருங் குழுவைச் சார்ந்தான்.
21
(இ-ள்)
உத்துபா வென்பவன் அவ்வண்ணம் வேத சாஸ்திரங்களில் தெளிந்த நாயகம் நபிமுகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுடன் பேசாது எழும்பிச் சிரத்தைக் குனிந்து வெட்கமுற்றுத்
தனது நிலைமையும் வலிமையும் அறிவும் நீங்கிய மனத்தோடும் புலம்பி நெடுமூச்சினால் தளர்ந்து
வில்லினது வல்லவர்களான தனது கூட்டத்தார்களுக்கு முன்னர் நாம் சொல்லுவது யாது? ஒன்றுமில்லையே
யென்று சஞ்சலத்தினது மத்தியில் கிடந்து தியக்கமடைந்து சோர்ந்து ஈரற்குலையானது
குலையப்பெற்றுத் தனது கூட்டத்தார்களும் அபூஜகி லென்பவனும் தங்கியிருக்கப்பட்ட பெரிய
கூட்டத்தில் போய்ச் சேர்ந்தான்.
|