முதற்பாகம்
தாங்கும் கைத்தலத்தை
யுடைய முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும்
நபியானவர்கள் இனிமையுடனிருந்தார்கள். பிற்பாடு
நடைபெற்ற வரலாறுகளை யாம் எடுத்துச் சொல்லுவாம்.
1737.மறுகிவெள் ளெகினஞ் சிந்த வரிவராற் றாவும் வாவி
செறிதிமஸ் கிறைவன் செல்வத் திருநக ரடுத்த
சீறூர்ப்
புறனிடத் துறைந்தா னென்னப் பொருவருந்
தடக்கை வெள்வே
லறபிகட் குரைத்தார் தூத ரபூசகு லறிய வன்றே.
79
(இ-ள்) வெண்ணிறத்தைக் கொண்ட
அன்னப்பட்சிகள் மனங் குழம்பிச் சிதறும்படி இரேகைகளை
யுடைய விரால் மீன்கள் பாயா நிற்கும் தடாகங்கள்
செறிந்த திமஸ்கு நகரத்தினது அதிபனான ஹபீபென்பவன்
செல்வத்தையுடைய தெய்வீக நகரமாகிய மக்காவை நெருங்கின
பக்கத்திலுள்ள சிற்றூரின்கண் தங்கியிருக்கின்றா
னென்று தூதர்கள் அபூஜகி லென்பவன் அறியும் வண்ணம்
ஒப்பற்ற பெரிய கையினது வெள்ளிய வேலாயுதத்தையுடைய
அறபிகளுக்குச் சொன்னார்கள்.
1738.கவனவாம் பரியு நால்வாய்ப் கரியுடன் கபீபு வேந்த
னிவணில்வந் தடைந்தா னென்ன
அபூசகுலிணைத்தோள் வீங்கி
யவிர்கதிர்க் கலன்க டாங்கி யகுமதை
வெல்வேன் மேலும்
புவனியி லெதிர்இயா ரென்னப் புதுமதிக்
களிப்புப் பூத்தான்.
80
(இ-ள்) அவ்வாறு சீக்கிரமாய்த் தாவா
நிற்கும் குதிரைகளுடனும் நாலப்பெற்ற வாயையுடைய
யானைகளுடனும் இவ்விடத்தில் ஹபீபரசன் வந்து சேர்ந்தா
னென்று சொல்ல, அபூஜகி லென்பவன் இரண்டு புயங்களும்
பூரிப்புற்று பிரகாசிக்கும் கிரணங்களை யுடைய
ஆபரணங்களைத் தரித்து நான் அஹ்மதென்னும் பெயரையுடைய
முகம்மதென்பவனை ஜெயிப்பேன். மேலும் எனக்கு
இப்பூலோகத்தின்கண் எதிரியானவர்கள் யாவர்?
ஒருவருமில்லரென்று சொல்லி ஒரு காலத்திலு முண்டாய் இராத
நூதனமாகிய விருப்பத்தைக் கொண்ட சந்தோஷமானது
உண்டாகப் பெற்றான்.
1739.நிகரரும் பதிக்குட் செவ்வி நெடுந்தெரு வனைத்துந் தூதைப்
புகவிடுத் தறிவிற் றேர்ந்த புரவலர்
தம்மைக் கூவி
முகிலுறை கனக மாட முன்றிலி னிருத்திச்
சேர்ந்த
தொகுதியில் கபீபு வேந்தன் வந்தவை
யெடுத்துச் சொன்னான்.
81
(இ-ள்) அவ்விதம் சந்தோஷமுண்டாயின
அபூஜகி லென்பவன் ஒப்பற்ற தனது மக்கமாநகரத்தின்
உள்ளிலுள்ள
|