பக்கம் எண் :

சீறாப்புராணம்

82


முதற்பாகம்
 

நபியவதாரப் படலம்

 

கலிவிருத்தம்

 

166. பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய்

    வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே

    கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணிணைத்

    திருநபி வருமவ தாரஞ் செப்புவாம்.

1

     (இ-ள்) கிருபையானது மாறாது குடியிருக்கும்படியான சிவந்த தாமரை மலர்போலும் உபயநோக்கங்களையும் தெய்வீகத்தையு முடைய நபிகள்பிரான் நமது நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இத்தனை கோடியென அளவிடற் கரிதாய்ப் பெருகிய பலகோடி சந்திரன்களது பிரகாச முழுவது மொன்றாய்வரும் பெரிய கிரணங்களையுடைய வொப்பில்லாத சந்திரனைப்போல இவ்வுலகின்கண் வராநிற்கும் ஜனனமகோதயாகமத்தினை யாஞ் சொல்லுவாம்.

 

வேறு  

 

167. கடியி ருந்தெழு கற்பக முஞ்சுடர்

    வடிவி ருந்த மணியும் வனசமும்

    படியுங் கார்முகி லேழும் பழித்துவிண்

    குடியி ருத்துங் கொழுந்தடக் கையினார்.

2

     (இ-ள்) நறு நாற்றமென்று மாறாது குடியிருந்தோங்கா நிற்குங் கற்பக விருக்கத்தையும் பிரகாசமே தமக்கு வடிவாய் விளங்கும் தேவமணிகளையும் பதும நிதியையும் சூன் முதிர்ந்திருக்கும் ஏழு மேகங்களையும் ஈகையாற்றமக்கு நிகராக மாட்டீர்களென்று பழித்து ஆகாயத்தின்கண் குடியாயிருக்கச்செய்யும் செழுமையான பெருமை பொருந்திய கையினையுடையவர்.

 

வேறு 

 

168. விண்டொடு கொடுமுடி மேரு வீறழித்

    தெண்டிசைக் கிரியொடு மிகலுங் கொங்கையர்

    கொண்டமா மயலொடு மனமுங் கூர்விழி

    வண்டொடும் வண்டுறை மாலை மார்பினார்.

3

     (இ-ள்) தேவலோகத்தைத் தீண்டும்படியான கொடுமுடியினை யுடைய மகாமேருவினது வீற்றையழியச் செய்து