பக்கம் எண் :

சீறாப்புராணம்

834


முதற்பாகம்
 

தளிர்களைக் கொண்ட மரங்க ளனைத்தும் பல புஷ்பங்களைச் சிந்தச் சிறந்த பரிமளமானது எவ்விடத்து முலவாநிற்கும் அழகிய நாயகம் தெய்வீகந் தங்கிய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னால் வைத்தான்.

 

2246. கனியினைக் கொணர்ந்து வைத்தோன் செம்முகங் கவின நோக்கி

     யினிதினி லிருக்கை யீந்திட் டெழிற் செழுங்கமலக் கையாற்

     பனிமலர்த் துகிலை நீத்துப் பழத்தினைத் தீண்டி யின்ப

     மனையநல் பிசுமி லோதி யமுதென நுகர்தல் செய்தார்.

4

      (இ-ள்) அந்தப் பழத்தை அவ்வாறு கொண்டு வந்து வைத்தவனாகிய அத்தா சென்பவனின் சிவந்த முகத்தை நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அழகோடும் பார்த்து அவனுக்கு இனிமையுடன் இருக்கை கொடுத்து அழகிய செழுமையான தாமரை மலர்போலும் தங்களின் கையினால் குளிர்ச்சி தங்கிய புஷ்பத்தை நிகர்த்த அந்த வஸ்திரத்தை நீத்துப் பழத்தைத் தொட்டு இன்பத்தைப் போன்ற நன்மை பொருந்திய ழுபிஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீழு மென்று கூறி அமுதத்தை யொத்து அருந்தினார்கள்.

 

2247. பண்ணினு மினிய தேன்சார் பழத்தினிற் பசியைப் போக்கி

     யுண்ணிறை யுவகை கூர்ந்தெவ் வூரவ னின்பே ரேதென்

     றண்ணலு முரைப்பச் செவ்வி யகமகிழ்ந் தத்தா சென்போன்

     புண்ணியப் பொருளே யென்னப் போற்றிவாய் புதைத்துச் சொல்வான்.

5

      (இ-ள்) அவ்வண்ண மருந்திய அண்ண லாகிய நபிகட் பிரானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் இசைப் பாட்டைப் பார்க்கிலும் இனிமையான நறவ மானது பொருந்திய கனியினால் தங்களின் பசியை யொழித்து மனசின்கண் நிறைந்த சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்று நீ எந்த ஊரையுடையவன்? உனது நாமம் யாது? என்று கேட்க, அந்த அத்தா சென்பவன் அழகிய மனக்களிப் படைந்து தரும வஸ்துவே! என்று சொல்லித் துதித்து வாயைப் பொத்திக் கூற ஆரம்பித்தான்.

 

2248. நள்ளென வுலகி னூழின் வருநசு றானி மார்க்கத்

     துள்ளவ னீன வாவென் றோதிய வூரி னுள்ளேன்

     றெள்ளிய னிறபீ ஆதன் றிருமனைக் கிணகன் சேந்த

     வள்ளிலை வேலோ யத்தா சென்பவ னடியே னென்றான்.

6