பக்கம் எண் :

சீறாப்புராணம்

900


இரண்டாம் பாகம்
 

     2428. நரபதி முகம்மதை மதீன நன்னகர்க்

         கரசென விருத்தியூ ரவர்க ளியாவரும்

         விரைவின்குற் றேவல்செய் திருப்ப வேண்டுமென்

         றொருவருக் கொருவர்முன் னுரைத்த துண்டரோ.

18

      (இ-ள்) மானிடர்க ளனைவர்க்கும் இராஜ ராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சீக்கிரத்தில் நன்மை பொருந்திய திரு மதீனமா நகரத்திற்கு அரசராக இருக்கச் செய்து அவ்வூரிலுள்ள நாங்களெல்லோரும் அடித்தொண்டு செய்திருக்க வேண்டு மென்று முன்னர் ஒருவருக் கொருவர் பேசின துண்டு.

 

     2429. ஊக்கமுற் றெமதுளத் துள்ளு மாறுநும்

         வாக்கினி லுரைத்தனிர் மதிக்கு மேலவ

         னாக்கிய திஃதினி தொழிவ தன்றமர்

         நீக்கிய கதிரயி னிருபர் வேந்தரே.

19

      (இ-ள்) போர்த் தொழிலை இல்லாம லகற்றிய ஒள்ளிய வேலாயுதத்தை யுடைய அரசராதிபரான அப்பாசே! நீவிர் உண்மையோடு எங்களது மனதின் கண் எண்ணிய வண்ணம் நுமது வாக்கினாற் கூறினீர், இஃது யாவரு மதிக்கா நிற்கும் மேன்மையை யுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் இனிமையுடன் ஆக்கிய கரும மாகும், தவிர்வதல்ல.

 

     2430. நனிகளிப் பெய்தியெம் முள்ள நன்குற

         வினியவை யிவையென விசைந்தோர் வாசகந்

         தனியவன் றூதுவர் சாற்று வாரெனிற்

         றினையள வினுமொரு சிதைவு மில்லையால்.

20

      (இ-ள்) எங்களது மனங்கள் மிகு மகிழ்வைப் பொருந்தி நன்மையுற ஏகனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாங்கள் எண்ணிய இனிமையான காரியங்கள் இன்னவை யென்று பொருந்தி ஓர் வார்த்தை கூறுவார்களே யானால் அவ்வார்த்தைக்கு ஓர் தினைப் பிரமாண மேனும் ஒரு கேடுமில்லை.

 

     2431. மறுவற வினையன மதீன மன்னவர்

         நிறைபெற வுரைத்தவை கேட்டு நீணிலத்

         திறையவன் றூதுவ ரினிய மாமறை

         முறையொடுந் தெளிதர மொழிவ தாயினார்.

21

      (இ-ள்) திரு மதீனமா நகரத்தினது அரசர்கள் குற்றமறும்படி நீண்ட இப் பூதலத்தின்கண் உறுதியோடுங் கூறிய இப்படிப்பட்ட