பக்கம் எண் :

சீறாப்புராணம்

932


இரண்டாம் பாகம்
 

தன்மையையும் பொருந்தும் வண்ணம் அபூஜகி லென்பவன் காதுகளினாற் கேள்வியுற்று மனதின் கண் தெளிந்து அந்தச் சபையினிடத்துத் தங்கியிருந்த அரசர்களாகிய அவர்களியாவரையும் கூப்பிட்டு இந்தப் பூமியின் கண் யாவருக்கும் பொருந்திய வார்த்தைகளைக் கூறினார்கள். எனக்கும் எனது சிந்தையினிடத்துத் தோற்ற மாகிய ஆலோசனை யொன்றுள்ளது. அஃதை நீங்கள் காதுகளினாற் கேளுங்க ளென்று சொல்லுவான்.

 

2523. வங்கிடத் தொருவர் படைக்கல மெடுத்து

          முகம்மதைப் பொதுவுற வளைந்து

     செங்கர மெடுத்திட் டியாவரு மோங்கிச்

          சின்னபின் னம்பட வுடலிற்

     பொங்கிய குருதி சிதறிடத் துணிகள்

          புரடரப் புவியினில் வீழ்த்தி

     நங்களை கடிவோங் கீர்த்தியை யுலகி

          னடத்துவோ நறைதரு புயத்தீர்.

58

      (இ-ள்) வாசனையைத் தரா நிற்குந் தோட்களையுடையோர்களே! நமது ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொருவர் கைகளில் ஆயுதங்களை எடுத்து அந்த முகம்ம தென்பவனைப் பொதுவாகச் சூழ்ந்து யாவரும் தங்களின் செந் நிறத்தை யுடைய கைகளை எடுத்துயர்த்தி அவனைக் கண்டு துண்டமாகவும், அவனது சரீரத்தின் கண்ணோங்கிய இரத்தமானது சிந்தவும் துண்டங்கள் புரளவும், இப் பூமியினிடத்து விழச் செய்து நமது களையை யொழித்து அதனால் வரா நிற்கும் புகழை இவ்வுலகத்தின் கண் நடைபெறச் செய்வோம்.

 

2524. இவ்வண முடித்தோ மெனிலொரு தீங்கு

          மியைந்திடா திரும்பழி சுமக்கி

     னொவ்வொரு பெயருக் கொருபழி தொடர்வ

          ரெவருல கினிற்கொடுப் பவரியார்

     செவ்விதி னெ்றியே யலதுவே றிலையென்

          றிசைத்தன னியாவர்க்குந் தெரியப்

     பவ்வமுங் கொலையுந் திரண்டுரு வெடுத்த

          பாதக னெனுமபூ சகுலே.

59

      (இ-ள்) பாவமும் கொலையும் ஒன்றோடென்று சேர்ந்து ஓர் வடிவத்தை எடுத்தாற் போன்ற தீமையனாகிய அவ் வபூஜகி லென்பவன் நாமனைவரும் இந்தப் பிரகாரஞ் செய்து நிறைவேற்றினோமே யானால் ஓர் தீமையும் நம்மை வந்து பொருந்தாது. அந்தப் பெரிய பழியைச் சுமந்தால் நம் மொவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு பழியைப் பின்பற்றுவார் யாவர்? இந்தப் பூமியின் கண்