பக்கம் எண் :

சீறாப்புராணம்

948


இரண்டாம் பாகம்
 

மலையினிடத்தில் வந்து பிரதி தினமுந் தங்கியிருக்கும்படி சொல்லுங்க ளென்று தங்கள் நாயகியாரோடு சொல்லி விட்டுத் தங்களின் ஜீவ னானது ஓர் வடிவத்தைப் பெற்றுத் தோன்றியதைப் போன்ற பாலக ராகிய அப்துல்லா வென்று சொல்லும் அபிதானத்தை யுடைய அரசரின் செழிய செந்நிறத்தை கொண்ட கையைப் பற்றி அந் நாயகி யவர்களுக்குந் தாங்கள் திரு மதீனமா நகரத்திற்குப் பிரயாணித்துச் செல்லும் சமாச்சாரத்தைக் கூறிக் கத்தூரி வாசனையானது கமழா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுடன் எழும்பினார்கள்.

 

2555. புகழோர் வடிவு கொண்டஅபூ

         பக்கர் பொதிசோ றனிதேந்தி

     யிகலா ரறியா தெழுந்துநடு

         விருளின் மறுகூ டினிதுவர

     முகிலார் கவிகை முகம்மதுமக்

         கானங் கடந்து முரம்படர்ந்த

     வகிர்வார் நெறியிற் காறடவி

          வந்தார் தௌறு மலைச்சார்பில்.

90

      (இ-ள்) கீர்த்தியையே ஓர் வடிவமாகக் கொண்ட அவ்வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் இனிமையோடும் பொதிசோறாகிய அந்த அப்பவருக்கச் சுமையைக்கையில் தாங்கிக் கொண்டு தாங்கள் செல்லுஞ் சமாச்சாரத்தைச் சத்துராதிகளொருவரு மறியாத வண்ணம் அவ்வா றெழும்பி நடு ராத்திரியினது அந்தகாரத்தில் இனிமையுடன் வீதியி னிடத்து வர, மேகங்கள் பொருந்திய குடையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அந்தக் காடுகளைத் தாண்டிப் பரற்கற்கள் நெருங்கப் பெற்ற பிளவுகளை யுடைய நீண்ட பாதையின் கண் நடந்து தௌறு மலையினது சார்பில் வந்து சேர்ந்தார்கள்.

 

2556. ஓங்க லடுத்தோர் பொதும்பரின்மூன்

          றுழுவை யுறைந்த தெனநபியும்

     வாங்கு சிலைக்கை வள்ளலபூ

          பக்க ரெனுமெய் மதியோரும்

     பாங்க ரப்துல் லாவெனுமப்

          பால னுடனு மினிதிருப்ப

     வீங்கு திரைப்பைங் கடற்குணபால்

          வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால்.

91