பக்கம் எண் :

190

28. சீர்காழி என்னும் காழிச்சீராம விண்ணகரம்

     நான்முகன் நாள் மிகைத்தருக்கை இருக்கு வாய்மை
          நலமிகுசீர் உரோமசனால் நவிற்றி - நக்கன்
     ஊன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை
          ஒளிமலர்ச் சேவடியணைவீர் உழுசேயோடச்
     சூல்முகமார் வளையனைவாய் உகுத்த முத்தைத்
          தொல் குருகு சினையென்னச் சூழ்ந்தியங்க - எங்கும்
     தேன்முகமார் கமலவயல் சேல் பாய் காழிச்
          சீராம விண்ணகரே சேர்மினீரே
                          (1179) பெரியதிருமொழி 3-4-2

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட காழிச்சீ ராம விண்ணகரம்
இன்றைய தினத்தில் சீர்காழி என்ற பெயர் தாங்கி சிறந்த நகரமாக
விளங்குகிறது (மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில்
மிகச் சிறந்த நகரமாய் விளங்குகிறது) சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும்
பேருந்துகள் இக்கோவிலின் வாயிலிலேயே செல்கின்றது. சீர்காழி புகைவண்டி
நிலையத்திலிருந்து சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது.

     இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் உட்பட பல புராணங்களிலும்
பேசப்பட்டுள்ளது.

     இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், சேத்திரத்திற்கு
“உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு
தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான்
அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியருளியதாகவும் இத்தல வரலாறு
பேசப்படுகிறது.

     பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை
அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம்
இருக்கலானார். உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு உன்
உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின்
ஆயுளில் ஒருவருடம் குறையும் என்று கூறி இன்னும் யாதுவேண்டுமென்று
கேட்க எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு
காட்டியருளவேண்டுமென்று வேண்ட அவ்வண்ணமே எம்பெருமான் தனது
இடதுகாலைத்