பக்கம் எண் :

260

42. திருக்கோவலூர்

     நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
          பாயும் பணிமறைத்த பண்பாளா - வாயில்
     கடைகழியா வுள்புகா காமர் பூங்கோவல்
     இடைகழியே பற்றியினி - (2167)
                        முதல் திருவந்தாதி - 86

     என்று பொய்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூரிலிருந்து
பேருந்து வசதிகள் உண்டு. விழுப்புரம்-காட்பாடி ரயில்பாதையில்
திருக்கோவலூர் ஒரு நிலையமாகும். திருச்சியிலிருந்து வேலூர் செல்லும்
பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.

வரலாறு

     பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் இத்தலம் பற்றி
விவரித்துப் பேசுகிறது. பகவான் தனது வாமன அவதாரத்தை தம்மைக் குறித்து
தவமிருந்த முனிவர்கட்காக இத்தலத்தில் மீண்டும் ஒரு முறை வாமன
அவதாரத்தைக் காட்டிக் கொடுத்ததாக ஐதீஹம். பஞ்ச கிருஷ்ணச்
ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். வாமன திருவிக்ரம அவதார ஸ்தலம்
என்றும் இது அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் கோவில் என்றே வடமொழி
நூல்கள் குறிக்கின்றன. ஆழ்வார்களால் முதன்முதலாப் பாடப்பட்ட திவ்ய
தேசம் இதுதான்.

     பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷ்ணக் கோவில்
என்று பிரதானமாக வழங்கப்பட்ட இத்தலத்தின் தொன்மை பல
சதுர்யுகங்கட்கு முந்தியதாகும். கோபாலன் என்னும் சொல்லே கோவாலன்
எனத் திரிந்தது. அந்த ஆயனான கோபாலன் எழுந்தருளியுள்ள ஸ்தலமே
திருக்கோவலூர் ஆயிற்று. தட்சிண பினாகினி எனப்படும்
தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

     மகா ஞானிகளும், நாரதரும், கின்னரங்களும் இந்தக் கிருஷ்ண
ஷேத்திரத்தில் தவம் செய்தனரென்றும் தானும் இந்தச் ஷேத்திரத்தில்
தவமியற்றியதாக கூறிய பிரம்மன், மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்டு
முனிவர் எம்பெருமானின் வாமன அவதாரத்தைக் காண விரும்பி தவமியற்றின
ஸ்தலம்