பக்கம் எண் :

330

54. திருக்கள்வனூர்

     நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய், நிறைந்தாய, கச்சி
     ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
     உள்ளுவாருள்ளத் துள்ளாய், உலகமேத்தும்
     காரகத்தாய் கார் வாளத்துள்ளாய், கள்வா
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
     பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
     பெருமான் உன் திருவடியே பேணி னேனே
                  (2059) திருநெடுந்தாண்டகம் 8

     என்று திருமங்கையாழ்வாரால் அர்ச்சாவதார மூர்த்திகள் பலரை
ஒருங்கே மங்களாசாசனம் செய்யப்பட்ட இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள கள்வா
என்னும் ஒரு சொல்லே இத்தலத்திற்கும் இப்பெருமாளுக்கும் இட்ட
மங்களாசாசனம் ஆகும். திருமங்கையாழ்வார் எத்தனையோ தலங்கட்கு
எம்பெருமானின் திருப்பெயர்களை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
அப்பாடல்களில் அவ்வெம்பெருமான்களின் பெயர்கள் தனித்து தெளிவாக
மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கும். அல்லது தலத்தின் பெயர் மட்டும்
தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டு ஒலிக்கும்.

     உ- ம்
அ) தண்ணார் தாமரை சூழ்தலைச்சங்க மேல்திசையுள் - 1736
   என்பதில் உள்ள தலைச்சங்க மென்பது தலைச்சங்க
   நாண்மதியத் திவ்ய தேசத்தையும்.
ஆ) கோழியும் கூடலும் கோயில் கொண்ட - 1399
    என்பதில் கோழி என்ற சொல்லால் தலத்தையும்

இ) போரானை குறுங்குடியெம் பெருமானை, திருத்தங்கால்
   ஊரானைக் கரம்பனூர் உத்தமனை -

     என்பதில் உள்ள கரம்பனூர் உத்தமனை என்பதில் பெருமானையும்
தலத்தையும்,

ஈ) பிண்டியார் மண்டை யேந்தி
   பிறர்மனை திரிதந்துண்ணும்