பக்கம் எண் :

381

63. திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்)

     பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை
          படுகடலி லமுதத்தைப் பர்வாய்க்கீண்ட
     சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
          சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
     போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
          புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை
     காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக்
          கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே (1088)
                           பெரியதிருமொழி 2-5-1

     இப்பூமியை உண்டுமிழ்ந்த பவளத்தானை தேவர்கட்கும் அசுரர்கட்கும்
பாற்கடலின் அமுதத்தைப் பகிர்ந்து கொடுத்த சீராளனை தொண்டர்களின்
உள்ளத்தில் முளைக்கின்ற தீங்கரும்பினை, யானையின் மருப்பையொடித்து
மருத மரத்தைச், சாய்த்த பொற்குன்றினை, மழை மேகம் போன்ற நிறத்தானை,
துன்பங் களைகின்ற கற்பகத்தை, நான் கடல் மல்லையில் கண்டேன் என்று
திருமங்கையாழ்வாரால் சேவிக்கப்படும் இத்தலம், பல்லவ வேந்தர்களின்
கலைக்களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது.

     சென்னையிலிருந்து ஏராளமான பேருந்துகள் உண்டு. சென்னையிலிருந்து
கோவளம் வழியாகச் செல்லும் போது வழியில் உள்ள திருவடந்தை திவ்ய
தேசத்தை சேவித்துவிட்டும் செல்லலாம்.

வரலாறு

     இத்தலத்தைப் பற்றிப் புராணங்களில் ஒரு சில குறிப்புகள்
கிடைக்கின்றன. தெலுங்கு காப்பியங்களிலும் விஜயநகர மன்னர்களின்
வரலாற்றிலும் இத்தலம் பேசப்படுகிறது. தமிழிலக்கியங்கள் ஏராளமான
குறிப்புகளைத் தருகிறது. இந்த தேசம் பல்லவ மன்னர்களின் வரலாற்றோடு
மண்டிக் கிடக்கிறது. பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச்
சொல்லி வரும்போது இத்தல வரலாறு இணைந்து வருகிறது.

     இந்த முனிவர் தாமரஸ புஷ்பங்களைக் கொண்டு சஷீராப்தி நாதனை
(திருப்பாற் கடலில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தை) வழிபட
எண்ணி ஒரு கூடை நிறைய