பக்கம் எண் :

399

65. திருநாவாய்

      மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
     கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம்
     விண்ணாளன் விரும்பியுரையும் திரு நாவாய்
     கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே
                       (3638) திருவாய்மொழி 9-8-5

     என்றும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருநாவாய்
என்னும் இத்திவ்ய தேசம் சென்னை கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில்
உள்ள திருநாவாய் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில்
உள்ளது. ஷோரனூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாங்கூர்
சமஸ்தானத்தைச் சார்ந்த இடக்குளம் என்ற ஊரிலிருந்து சுமார் அரை மைல்
தூரம் உள்ளது.

வரலாறு.

     இவ்விடத்தில் எம்பெருமானைக் குறித்து 9 யோகிகள் தவம்
செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று
அழைக்கப்பட்டு காலப் போக்கில் நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது
திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.

மூலவர்

     நாவாய் முகுந்தன் நாராயணன் கிழக்கு நோக்கிய திருக்கோலம்

தாயார்

     மலர்மங்கை நாச்சியார்

விமானம்

     வேதவிமானம்

காட்சி கண்டவர்கள்

     இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள்.

சிறப்புக்கள்

     1. இத்தலம் பாரத் புழை ஆற்றை ஒட்டியுள்ளது. கேரளாவில் இத்தலம்
மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். காசியில்
நடைபெறுவதைப் போன்று இங்கு சிரார்த்தங்களும் செய்யப்படுகின்றன.
இத்தலத்தின்