பக்கம் எண் :

429

73. திருவாறன் விளை (ஆரம்முளா)

     ஆகுங்கொல் ஐயமொன்றின்றி அகலிடம்
          முற்றவும் ஈரடியே
     ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன்
          அமர்ந் துறையும்
     மாகம் திகழ் கொடிமாடங்கள் நீடு
          மதிள் திருவாறன்விளை
     மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ் செய்து
          கை தொழக் கூடுங் கொலோ (4347)
                          திருவாய்மொழி 7-10-2

     என்று நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவாறன்விளை
என்னும் இந்த திவ்விய தேசம் நகரமாகவும் தினந்தோறும்
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் தலமாகவும் எப்போதும் பக்தர்கள்
கூட்டத்தால் எழும் ஆரவாரத்துடனும் திகழ்கிறது.

     செங்கண்ணூரிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 10 கி.மீ. தொலைவில்
உள்ளது. பல இடங்களிலிருந்தும் இந்நகரத்திற்கு இந்நகரின் வழியாகவும்
அடிக்கடி பேருந்துகள் சென்ற வண்ணமேயிருக்கும். மலைநாட்டுப் பதிகளில்
பக்தர்களின் மனங்கவர்ந்த தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

     கோவில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நல்ல வேலைப்பாடுகளுடன்
தூய்மை நிறைந்து காணப்படுகிறது.

வரலாறு.

     பஞ்சபாண்டவர்களுள் அர்ஜு னனால் புதுப்பிக்கப்பட்ட இத்தலம்
இன்றும் அவன் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு அர்ஜு னன் அம்பலம்
என்று சொல்லத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறது.

     பாரத யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் பதிந்துவிட்டது.
அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்த
கர்ணன் அச்சக்கரத்தை தோள்கொடுத்து தூக்கும்போது அர்ஜு னன்
அம்பெய்து கர்ணனைக் கொன்றான். இவ்வாறு நிராயுத பாணியான
கர்ணனைக் கொன்றது அர்ஜு னனுக்கு நியாயமாகப் படவில்லை. யுத்த
தர்மத்தின்படி அது பெரும் பாவம் என்றும் அதிலும்