பக்கம் எண் :

608

99. திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயாகை)

     மூன்றெழுத்ததனை மூன்றெழுத் ததனால்
          மூன்றெழுத்தாக்கி, மூன்றெழுத்தை
     ஏன்று கொண்டிருப்பார்க் கிரக்க நன் குடைய
          எம் புருடோத்தம னிருக்கை
     மூன்றடி நிமிர்த்தி மூன்றினில் தோன்றி
          மூன்றினில் முன்றுரு வானான்
     காண்தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
          கண்டமென்னும் கடி நகரே (400)
                 பெரியாழ்வார் திருமொழி 4-7-10

     விஷ்ணு என்னும் மூன்றெழுத்ததனை, லக்ஷ்மி என்னும்
மூன்றெழுத்ததனால் அவர்களால் நித்ய வாசம் செய்யும் பரம் என்னும்
இருப்பிடத்தைக் குறிக்கும் மூன்றெழுத்தாக்கி (அதை அடைவதே தமக்கு
உபாயம்) அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி முக்தி என்னும்
மூன்றெழுத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்களிடம் இரக்கமுடைய எமது
புருடோத்தமன், வாமன அவதாரங்கொண்டு ஓரடியில் இவ்வுலகு நிமிர
(அளந்து) ஓரடியில் விண்நிமிர, ஓரடியில் பாதாளம் நிமிர மூன்றடியாக
நிமிர்த்தி இந்த மூன்று உலகினும் தோன்றியவன் பரம் வ்யூக, விபவம்
என்னும் மூன்றினில், நின்று, அமர்ந்த, கிடந்த, என்று மூன்றுருவானவன்,
இந்த அழகான பொழில் சூழ்ந்த கங்கைக் கரைமேல் அமைந்துள்ள
கண்டமென்னும் கடிநகரில் எழுந்தருளியுள்ளான் என்று பெரியாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத்
செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி
உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத்
சென்றுவிட்டும் திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்ரியிலிருந்து
சுமார் 60 மைல் தூரமாகும்.

     இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம்,
வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால்
இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே
தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை
என்றாயிற்று என்றும்