பக்கம் எண் :

612

இருக்கிறாள் ம என்ற எழுத்தாகவும், சங்கர்ஷனனாகவும் இருக்கிறாள் கங்கை.

     இங்குள்ள ஆலமரம் அழிவற்றது. அதில் வேணிமாதவன் என்ற பெயரில்
விஷ்ணு, ஆடலங்கேசர் என்ற பெயரில் சிவன், மற்றும் பிரம்மனும் இதில்
வாசம் செய்கின்றனர்.

     12. பாண்டவர்கள் போருக்குப்பின் தமது சத்துருக்களைக் கொன்ற
பாவங்களைப் போக்க யாது வழி என்று மார்க்கண்டேயரிடம் கேட்க, அவர்
ப்ரயாகை ஒன்றே சகல பாவங்களையும் போக்கவல்லது என்று பாண்டவர்களை
இங்கு அனுப்பி வைத்ததாக மாத்ஸய புராணம் கூறுகிறது.