தொடக்கம் | ||
1. திருப்பிரமபுரம் - நட்டபாடை
|
||
1. | தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! |
1 பதிவிறக்கம் செய்யஉரை |
2. | முற்றல் ஆமை இள
நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! |
2 பதிவிறக்கம் செய்யஉரை |
3. | நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா
வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- “ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! |
3 பதிவிறக்கம் செய்யஉரை |
4. |
விண்
மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! |
உரை |
5. |
“ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை
ஊரும்(ம்) இவன்!” என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! |
5 பதிவிறக்கம் செய்யஉரை |
6. | மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! |
6 பதிவிறக்கம் செய்யஉரை |
7. |
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச்
சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! |
7 பதிவிறக்கம் செய்யஉரை |
8. |
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம்
விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! |
8 பதிவிறக்கம் செய்யஉரை |
9. | தாள்
நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை
யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! |
9 பதிவிறக்கம் செய்யஉரை |
10. | புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! |
10 பதிவிறக்கம் செய்யஉரை |
11. | அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே. |
11 பதிவிறக்கம் செய்யஉரை |