தொடக்கம் | ||
12. திருமுதுகுன்றம் - நட்டபாடை
|
||
119. |
மத்தா வரை
நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம் கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே. |
உரை |
120. |
தழை ஆர்
வடவிடவீதனில் தவமே புரி சைவன், இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம் மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண், முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே. |
உரை |
121. |
விளையாதது ஒரு பரிசில் வரு பசு
பாசவேதனை, ஒண் தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம் களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே. |
உரை |
122. |
சுரர், மா தவர்,
தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர் அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும் முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே. |
உரை |
123. |
அறை ஆர்
கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர் கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில், மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு, முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே. |
உரை |
124. |
ஏ ஆர் சிலை
எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார், மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே. |
உரை |
125. |
தழல் சேர்தரு
திருமேனியர், சசி சேர் சடை முடியர், மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில் விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை, முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே. |
உரை |
126. |
செது வாய்மைகள் கருதி வரை
எடுத்த திறல் அரக்கன் கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில் மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே. |
உரை |
127. |
இயல் ஆடிய
பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய, செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்- புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே. |
உரை |
128. |
அருகரொடு
புத்தர் அவர் அறியா அரன், மலையான் மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர் கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி, முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே. |
உரை |
129. |
முகில் சேர்தரு
முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர் புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே. |
உரை |