19. திருக்கழுமலம் - (திருவிராகம்) நட்டபாடை
 
195. பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் 
                                                             உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில்
                                                             உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர்
                                                             கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல்
                                                             மருவுமே!
உரை
   
196. பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர்
                                                             சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல்
                                                             மருவுமே!
உரை
   
197. வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர் 
                                                             கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி
                                                             கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு
                                                             எய்துமதே.
உரை
   
198. வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது
                                                             எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை
                                                             உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர்
                                                             கழல்களே!
உரை
   
199. தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை
                                                             இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல்
                                                             கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.
உரை
   
200. வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி
                                                             மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல்
                                                             உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ,
                                                             அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல்
                                                             ஒருதலைமையே.
உரை
   
201. முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை;
                                                             இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு
                                                             அறியமே.
உரை
   
202. கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, "அடி சரண்!" என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி
                                                             கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை
                                                             உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர்
                                                             அதே.
உரை
   
203. கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும்,
                                                             அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி
                                                             விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர்
                                                             அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன்
                                                             உலகமே.
உரை
   
204. அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண்
                                                             உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற
                                                             உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!
உரை
   
205. பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர்
                                                             திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.
உரை