21. திருச்சிவபுரம் - திருவிராகம் நட்டபாடை
 
217. புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம்,
                                                             அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது
                                                             மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.
உரை
   
218. மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை
                                                             நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன்
                                                             உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.
உரை
   
219. பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர்
                                                             அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன்
                                                             உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.
உரை
   
220. நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும்
                                                             அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை
                                                             வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.
உரை
   
221. சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும்
                                                             உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது
                                                             நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.
உரை
   
222. சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு
                                                             பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன்
                                                             உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை
                                                             நிகழுமே.
உரை
   
223. கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன்
                                                             நுதிமிசை,
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.
உரை
   
224. அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு
                                                             வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு
                                                             உடையரே.
உரை
   
225. அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல்
                                                             மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன்
                                                             நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி
                                                             திகழுமே.
உரை
   
226. "குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய
                                                             பொருள்களும் இல,
திணம்" எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி
                                                             உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.
உரை
   
227. திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு
                                                             சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம்
                                                             மிகுவரே.
உரை