22. திருமறைக்காடு - திருவிராகம் நட்டபாடை
 
228. சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது
                                                             கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது
                                                             நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.
உரை
   
229. கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள்
                                                             உடையினன்-
இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில்
                                                             பெற வளர்,
மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.
உரை
   
230. இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில்
                                                             உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ,
                                                             முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.
உரை
   
231. நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.
உரை
   
232. கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு
பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.
உரை
   
233. கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,
முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி,
                                                             வட முகம்,
உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு
                                                             மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.
உரை
   
234. இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை
                                                             முழுவதும் கெட,
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு
                                                             உடையவன்-இனமலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.
உரை
   
235. சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல்
                                                             நிறுவினன்-
"இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த
                                                             கருணையன்" என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.
உரை
   
236. அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு
                                                             பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து
பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல்
                                                             திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.
உரை
   
237. இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு
                                                             தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து
                                                             தவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன்
                                                             அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.
உரை
   
238. வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.
உரை