தொடக்கம் | ||
24. சீகாழி - தக்கராகம்
|
||
250. |
“ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா! காவாய்!” என நின்று ஏத்தும் காழியார், மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம் பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே. |
உரை |
251. |
“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி, கந்தமாலை கொடு சேர் காழியார், வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம் அந்தி நட்டம் ஆடும் அடிகளே. |
உரை |
252. |
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம், கானமான் கைக் கொண்ட காழியார், வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் ஆன இன்பம் ஆடும் அடிகளே. |
உரை |
253. |
மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக்கு அளித்த காழியார், நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் பேணார் புரங்கள் அட்ட பெருமானே. |
உரை |
254. |
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல் காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார், வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம் ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே. |
உரை |
255. |
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக் கங்கை புனைந்த சடையார், காழியார், அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே. |
உரை |
256. |
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும் கல்லவடத்தை உகப்பார் காழியார், அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம் பல்ல இடத்தும் பயிலும் பரமரே. |
உரை |
257. |
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி, கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்; எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே. |
உரை |
258. |
ஆற்றல் உடைய அரியும் பிரமனும் தோற்றம் காணா வென்றிக் காழியார், ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் கூற்றம் மறுகக் குமைத்த குழகரே. |
உரை |
259. |
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர் கரக்கும் உரையை விட்டார், காழியார், இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம் அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே. |
உரை |
260. |
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச் சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே. |
உரை |