தொடக்கம் | ||
29. திருநறையூர்ச் சித்தீச்சுரம் - தக்கராகம்
|
||
305. |
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த, நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல், சீர் உலாவும் மறையோர் நறையூரில், சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே! |
உரை |
306. |
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி, ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ, வீடும் ஆக மறையோர் நறையூரில், நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே! |
உரை |
307. |
கல்வியாளர், கனகம் அழல் மேனி புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர், மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில் செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே! |
உரை |
308. |
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ ஆட வல்ல அடிகள் இடம் ஆகும், பாடல் வண்டு பயிலும், நறையூரில் சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே! |
உரை |
309. |
உம்பராலும் உலகின் அவராலும் தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர், நண்பு உலாவும் மறையோர், நறையூரில் செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே! |
உரை |
310. |
கூர் உலாவு படையான், விடை ஏறி, போர் உலாவு மழுவான், அனல் ஆடி, பேர் உலாவு பெருமான், நறையூரில் சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே. |
உரை |
311. |
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர், மன்றில் வாச மணம் ஆர், நறையூரில் சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே! |
உரை |
312. |
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர், பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில் திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே! |
உரை |
313. |
ஆழியானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்து, மேல் சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர் நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே! |
உரை |
314. |
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார், கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்! உய்ய வேண்டில், இறைவன் நறையூரில் செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே. |
உரை |
315. |
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் பத்தும் பாட, பறையும், பாவமே. |
உரை |