32. திருஇடைமருதூர் - தக்கராகம்
 
338. ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.
உரை
   
339. தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.
உரை
   
340. வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை
   
341. அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை
   
342. வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை
   
343. வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.
உரை
   
344. தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.
உரை
   
345. பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.
உரை
   
346. முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.
உரை
   
347. சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.
உரை
   
348. கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.
உரை