தொடக்கம் | ||
33. திருஅன்பில் ஆலந்துறை - தக்கராகம்
|
||
349. |
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே. |
உரை |
350. |
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி, விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்- கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
351. |
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து, பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
352. |
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல் நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
353. |
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல், கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் மாடு முழவம் அதிர, மட மாதர் ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
354. |
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்- வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
355. |
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை, கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும் அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
356. |
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி, படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி, கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
357. |
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும், பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை; சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
358. |
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர், நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல் வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே. |
உரை |
359. |
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே. |
உரை |