தொடக்கம் | ||
34. சீகாழி- தக்கராகம்
|
||
360. |
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல் மடல் ஆர் குழலாளொடு மன்னும், கடல் ஆர் புடை சூழ் தரு, காழி தொடர்வார் அவர் தூ நெறியாரே. |
உரை |
361. |
திரை ஆர் புனல் சூடிய செல்வன், வரையார் மகளோடு மகிழ்ந்தான், கரை ஆர் புனல் சூழ்தரு, காழி நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே! |
உரை |
362. |
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை துடி ஆர் இடையாளொடு துன்னும், கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி அடியார் அறியார், அவலமே. |
உரை |
363. |
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன், அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய், களி ஆர் பொழில் சூழ்தரு, காழி எளிது ஆம், அது கண்டவர் இன்பே. |
உரை |
364. |
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன், முனி தான், உமையோடு முயங்கி, கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி இனிது ஆம், அது கண்டவர் ஈடே. |
உரை |
365. |
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து மலையான் மகளோடு மகிழ்ந்தான், கலையார் தொழுது ஏத்திய, காழி தலையால் தொழுவார் தலையாரே. |
உரை |
366. |
திரு ஆர் சிலையால் எயில் எய்து, உரு ஆர் உமையோடு உடன் ஆனான், கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி மருவாதவர் வான் மருவாரே. |
உரை |
367. |
அரக்கன் வலி ஒல்க அடர்த்து, வரைக்கு மகளோடு மகிழ்ந்தான், சுரக்கும் புனல் சூழ்தரு, காழி நிரக்கும் மலர் தூவும், நினைந்தே! |
உரை |
368. |
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் உருவில் பெரியாளொடு சேரும், கரு நல் பரவை கமழ், காழி மருவ, பிரியும், வினை மாய்ந்தே. |
உரை |
369. |
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற, அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்; கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே. |
உரை |
370. |
நலம் ஆகிய ஞானசம்பந்தன் கலம் ஆர் கடல் சூழ் தரு காழி நிலை ஆக நினைந்தவர் பாடல் வலர் ஆனவர் வான் அடைவாரே. |
உரை |