தொடக்கம் | ||
38. திருமயிலாடுதுறை - தக்கராகம்
|
||
404. |
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் வர மா மயிலாடுதுறையே. |
உரை |
405. |
உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதி என்பர் குரவம், சுரபுன்னையும், வன்னி, மருவும் மயிலாடுதுறையே. |
உரை |
406. |
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில், ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு ஆன மயிலாடுதுறையே! |
உரை |
407. |
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற மஞ்சன் மயிலாடுதுறையை நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல் துஞ்சும், பிணி ஆயினதானே. |
உரை |
408. |
தணி ஆர் மதி செஞ்சடையான்தன் அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும் பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் மணியான், மயிலாடுதுறையே. |
உரை |
409. |
தொண்டர் இசை பாடியும் கூடிக் கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் பண்டும் பல வேதியர் ஓத, வண்டு ஆர் மயிலாடுதுறையே. |
உரை |
410. |
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் நுணங்கும் புரிநூலர்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறையே. |
உரை |
411. |
சிரம் கையினில் ஏந்தி இரந்த பரம் கொள் பரமேட்டி, வரையால் அரங்க அரக்கன் வலி செற்ற, வரம் கொள் மயிலாடுதுறையே. |
உரை |
412. |
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும், கோலத்து அயனும், அறியாத சீலத்தவன் ஊர் சிலர் கூடி மாலைத் தீர் மயிலாடுதுறையே. |
உரை |
413. |
நின்று உண் சமணும், நெடுந் தேரர், ஒன்று அறியாமை உயர்ந்த வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் மன்றல் மயிலாடுதுறையே. |
உரை |
414. |
நயர் காழியுள் ஞானசம்பந்தன் மயர் தீர் மயிலாடுதுறைமேல் செயலால் உரை செய்தன பத்தும் உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே. |
உரை |