49. திருநள்ளாறு - பழந்தக்கராகம்
 
526. போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
உரை
   
527. தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.
உரை
   
528. ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.
உரை
   
529. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
530. ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
531. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
“எங்கள் உச்சி எம் இறைவன்!” என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.
உரை
   
532. வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
533. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
534. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
“அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
535. மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.
உரை
   
536. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.
உரை
   
537. ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய
சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி,
நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
உரை
   
538. இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம்,
பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்;
தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே!
மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
உரை
   
539. பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை
விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய,
கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;-
வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே!
உரை