தொடக்கம் | ||
54. திருஓத்தூர் - பழந்தக்கராகம்
|
||
580. |
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே. |
உரை |
581. |
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் புடையீரே! புள்ளிமான் உரி உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச் சடையீரே! உம தாளே. |
உரை |
582. |
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்! ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க் கள்வீரே! உம காதலே! |
உரை |
583. |
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே! அடியார் வினை ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே! அருள் நல்குமே! |
உரை |
584. |
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே! |
உரை |
585. |
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத் தக்கார் தம் மக்களீர் என்று உட்காதார் உளரோ? திரு ஓத்தூர் நக்கீரே! அருள் நல்குமே! |
உரை |
586. |
“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை நாதா!” என்று நலம் புகழ்ந்து ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர் ஆதீரே! அருள் நல்குமே! |
உரை |
587. |
“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; “ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்” என்றார் மேல் வினை ஏகுமே. |
உரை |
588. |
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச் சென்றார் போலும், திசை எலாம் ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர் நின்றீரே! உமை நேடியே! |
உரை |
589. |
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே! |
உரை |
590. |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே. |
உரை |