தொடக்கம் | ||
66. திருச்சண்பைநகர் - தக்கேசி
|
||
712. |
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம் அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே. |
உரை |
713. |
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப் போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர் மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே. |
உரை |
714. |
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த, தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே. |
உரை |
715. |
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக் கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால், சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே. |
உரை |
716. |
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே. |
உரை |
717. |
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே. |
உரை |
718. |
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து, அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின் மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்- தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே. |
உரை |
719. |
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும், எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல் பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே. |
உரை |
720. |
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும், நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின் மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர், சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே. |
உரை |
721. |
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி, சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே. |
உரை |
722. |
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி, பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்; “நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று, பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே. |
உரை |