தொடக்கம் | ||
81. சீகாழி - குறிஞ்சி
|
||
875. |
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்- சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த, வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும் கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே. |
உரை |
876. |
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம், தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி, ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும் களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே. |
உரை |
877. |
ஆலக் கோலத்தின்
நஞ்சு உண்டு, அமுதத்தைச் சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால் பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே. |
உரை |
878. |
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும் நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும் பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே. |
உரை |
879. |
மாலும் பிரமனும்
அறியா மாட்சியான், தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன், ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழிந் நகர்தானே. |
உரை |
880. |
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள், பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்! மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக் கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே. |
உரை |
881. |
வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன் பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப் பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே. |
உரை |