தொடக்கம் | ||
82. திருவீழி மிழலை - குறிஞ்சி
|
||
882. |
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,- திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே. |
உரை |
883. |
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர, ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும் வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே. |
உரை |
884. |
பயிலும்
மறையாளன் தலையில் பலி கொண்டு, துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் மயிலும் மடமானும் மதியும் இள வேயும் வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே. |
உரை |
885. |
இரவன் பகலோனும்
எச்சத்து இமையோரை நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில் குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை, விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே. |
உரை |
886. |
கண்ணின்
கனலாலே காமன் பொடி ஆக, பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே. |
உரை |
887. |
மால் ஆயிரம்
கொண்டு மலர்க்கண் இட, ஆழி ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள் மேலால் எரி காட்டும் வீழி மிழலையே. |
உரை |
888. |
மதியால் வழிபட்டான்
வாழ்நாள் கொடுபோவான், கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில் நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. |
உரை |
889. |
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி; கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில் படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே. |
உரை |
890. |
கிடந்தான்
இருந்தானும், கீழ் மேல் காணாது, தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில் படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே. |
உரை |
891. |
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும் நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே. |
உரை |
892. |
மேல் நின்று
இழி கோயில் வீழி மிழலையுள் ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே. |
உரை |