தொடக்கம் | ||
89. திருஎருக்கத்தம்புலியூர் - குறிஞ்சி
|
||
959. |
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச் சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில் விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே. |
உரை |
960. |
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய், நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில் கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே. |
உரை |
961. |
“விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ! பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி! எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற அண்ணா!” என வல்லார்க்கு அடையா, வினைதானே. |
உரை |
962. |
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி, வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே. |
உரை |
963. |
வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து, சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான், ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை வேறா நினைவாரை விரும்பா, வினைதானே. |
உரை |
964. |
நகுவெண்தலை
ஏந்தி நானாவிதம் பாடிப் புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத் தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே. |
உரை |
965. |
‘ “ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு, “தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்- தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே. |
உரை |
966. |
“மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி! நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய் இறையான்!”எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே. |
உரை |
967. |
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி, சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும் நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே. |
உரை |
968. |
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை, சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன் ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார் பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே. |
உரை |