91. திருஆரூர் - திருஇருக்குக்குறள்
 
981. சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.
உரை
   
982. பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.
உரை
   
983. துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.
உரை
   
984. உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.
உரை
   
985. பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.
உரை
   
986. பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.
உரை
   
987. வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.
உரை
   
988. அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.
உரை
   
989. துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.
உரை
   
990. கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.
உரை
   
991. சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.
உரை