தொடக்கம் | ||
92. திருவீழிமிழலை - திருஇருக்குக்குறள்
|
||
992. |
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே. |
உரை |
993. |
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே! |
உரை |
994. |
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே! |
உரை |
995. |
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே! |
உரை |
996. |
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே! |
உரை |
997. |
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே! |
உரை |
998. |
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே! |
உரை |
999. |
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே! |
உரை |
1000. |
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே! |
உரை |
1001. |
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிரிவு அது அரியதே. |
உரை |
1002. |
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே. |
உரை |