தொடக்கம் | ||
93. திருமுதுகுன்றம் - திருஇருக்குக்குறள்
|
||
1003. |
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே. |
உரை |
1004. |
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர், நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே. |
உரை |
1005. |
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று, கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே. |
உரை |
1006. |
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் வாசமலர் தூவ, பாசவினை போமே. |
உரை |
1007. |
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர், பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே. |
உரை |
1008. |
“மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என வல்லார் பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே. |
உரை |
1009. |
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் படைஆயின சூழ, உடையார், உலகமே. |
உரை |
1010. |
பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும் அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே! |
உரை |
1011. |
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே. |
உரை |
1012. |
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான், நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே! |
உரை |
1013. |
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே. |
உரை |