95. திருஇடைமருர் - திருஇருக்குக்குறள்
 
1025. தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
காடு பேணி நின்று ஆடும் மருதனே.
உரை
   
1026. கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்;
மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.
உரை
   
1027. எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை,
பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே.
உரை
   
1028. விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.
உரை
   
1029. பந்த விடை ஏறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.
உரை
   
1030. கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே.
உரை
   
1031. பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார், இன்பமே.
உரை
   
1032. எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.
உரை
   
1033. இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.
உரை
   
1034. நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.
உரை
   
1035. கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,
பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே.
உரை