96. திருஅன்னியூர் - திருஇருக்குக்குறள்
 
1036. மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.
உரை
   
1037. பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!
உரை
   
1038. நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!
உரை
   
1039. பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச்
சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.
உரை
   
1040. நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!
உரை
   
1041. இன்பம் வேண்டுவீர்! “அன்பன், அன்னியூர்
நன்பொன்” என்னுமின், உம்பர் ஆகவே!
உரை
   
1042. “அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே!” என, பந்தம் நீங்குமே.
உரை
   
1043. தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!
உரை
   
1044. இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.
உரை
   
1045. குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே.
உரை
   
1046. பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!
உரை