102. சீகாழி - குறிஞ்சி
 
1102. “உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா!” என்பார் தத்துவஞானத் தலையாரே.
உரை
   
1103. “மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக்
கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி
மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே!
ஐயா!” என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.
உரை
   
1104. “இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ,
களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி,
அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!” என்று
உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.
உரை
   
1105. “எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து,
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி,
பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு
நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.
உரை
   
1106. “மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட,
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி,
உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்-
குழையா!” என்று கூற வல்லார்கள் குணவோரே.
உரை
   
1107. “குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி,
வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா!” என்பாரை
அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.
உரை
   
1108. “உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு,
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி,
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா!” என்ன, தவம் ஆமே.
உரை
   
1109. “ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,
வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப் பரவும் அரசே!” என்ன, வினை போமே.
உரை
   
1110. “மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும்
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித்
தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய்!” என்ன, தொல்வினை ஆய நில்லாவே.
உரை
   
1111. வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக்
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி
அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.
உரை