தொடக்கம் | ||
111. திருக்கடைமுடி - வியாழக்குறிஞ்சி
|
||
1196. |
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் விருத்தனை, பாலனை, வினவுதிரேல், ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும் கருத்தவன், வள நகர் கடைமுடியே. |
உரை |
1197. |
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும் அரை பொரு புலி அதள் அடிகள் இடம், திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் கரை பொரு வள நகர் கடைமுடியே. |
உரை |
1198. |
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை, கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி, ஏல நல்மலரொடு விரை கமழும் காலன வள நகர் கடைமுடியே. |
உரை |
1199. |
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார் மை அணி மிடறு உடை மறையவன் ஊர், பை அணி அரவொடு மான் மழுவாள் கை அணிபவன் இடம் கடைமுடியே. |
உரை |
1200. |
“மறை அவன், உலகு அவன், மாயம் அவன், பிறையவன், புனல் அவன், அனலும் அவன், இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்- கறையவன் வள நகர் கடைமுடியே. |
உரை |
1201. |
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை மடவரலாளை ஒர்பாகம் வைத்து, குடதிசை மதி அது சூடு சென்னிக் கடவுள் தன் வள நகர் கடைமுடியே. |
உரை |
1202. |
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல், அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்; கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் கடி புல்கு வள நகர் கடைமுடியே. |
உரை |
1203. |
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச் சாதல் செய்து, அவன், “அடி சரண்!” எனலும், ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் காதல் செய் வள நகர் கடைமுடியே. |
உரை |
1204. |
அடி முடி காண்கிலர் ஓர் இருவர் புடை புல்கி, “அருள்!” என்று போற்று இசைப்ப, சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம் கடை முடி; அதன் அயல் காவிரியே. |
உரை |
1205. |
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை; எண்ணியகால், அவை இன்பம் அல்ல; ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த கண்ணுதல் வள நகர் கடைமுடியே. |
உரை |
1206. |
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர் சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே. |
உரை |