112. திருச்சிவபுரம் - வியாழக்குறிஞ்சி
 
1207. இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.
உரை
   
1208. அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.
உரை
   
1209. மலைமகள் மறுகிட, மதகரியைக்
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.
உரை
   
1210. மண், புனல், அனலொடு, மாருதமும்,
விண், புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.
உரை
   
1211. வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்-
நாறு நன் குர விரி வண்டு கெண்டித்
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.
உரை
   
1212. மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே.
உரை
   
1213. ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-
வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.
உரை
   
1214. எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்
முழுவலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.
உரை
   
1215. சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
உரை
   
1216. மண்டையின், குண்டிகை, மாசு தரும்,
மிண்டரை விலக்கிய விமலன் நகர்-
பண்டு அமர்தரு பழங்காவிரியின்
தெண்திரை பொருது எழு சிவபுரமே.
உரை
   
1217. சிவன் உறைதரு, சிவபுரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்-
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.
உரை