115. திருஇராமன்நந்தீச்சுரம் - வியாழக்குறிஞ்சி
 
1238. சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1239. சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,
தந்த மதத்தவன் தாதையோ தான்,
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல
எம் தவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1240. தழை மயில் ஏறவன் தாதையோ தான்,
மழை பொதி சடையவன், மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின்
இழையவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1241. சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்,
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்,
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1242. தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்-
தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு பட அரவம்
ஏய்ந்தவந்-இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1243. சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன், காளிதன் பெரிய கூத்தை
அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும்
எரியவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1244. மாறு இலா மாது ஒருபங்கன், மேனி
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறு அது சூடுவான், அழகன், விடை
ஏறவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1245. தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன்,
பட அரவு ஆட்டிய படர் சடையன்,
நடம் அது ஆடலான், நால்மறைக்கும்
இடமவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1246. தனம் அணி தையல் தன் பாகன் தன்னை,
அனம் அணி அயன் அணிமுடியும் காணான்;
பன மணி அரவு அரி பாதம் காணான்;
இன மணி இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1247. தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்!
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்!
மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை
எறியவன், இராமன் நந்தீச்சுரமே.
உரை
   
1248. தேன் மலர்க் கொன்றை யோன்........ உரை